தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

மைக்கல் வாகன் குசும்புக்காரன்... இங்கிலாந்துதான் உலகக்கோப்பை வெல்லும் என மறைமுக டுவீட் - மைக்கேல் வாகன் ட்வீட்

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்தும் அணிதான் கோப்பையை வெல்லும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் டுவீட் செய்துள்ளார்.

மைக்கேல் வாகன் ட்வீட்

By

Published : Jun 28, 2019, 10:00 PM IST

Updated : Jun 28, 2019, 11:19 PM IST

இங்கிலாந்தில் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. இதன் மூலம், இந்தத் தொடரில் இந்திய அணி விளையாடிய ஆறு போட்டிகளில் ஐந்து வெற்றி, ஒரு போட்டி முடிவு இல்லை என 11 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

ஒருகட்டத்தில் தொடர்ந்து வெற்றிகளை மட்டுமே பதிவு செய்து வந்த நியூசிலாந்து அணி, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்திருந்தது. இதனால், இந்தத் தொடரில் தோல்வியை சந்திக்காத அணியாக இந்திய அணி திகழ்கிறது. இந்நிலையில், இது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் டுவீட் செய்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் கோலி

அதில், "இந்தியாவை தோற்கடிக்கும் அணியே உலகக்கோப்பையை வெல்லும். இதுதான் என்னுடைய கருத்து என பதிவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து, நாளை மறுநாள் இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இப்போட்டியில், இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் உள்ளது.

இதனால், இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றால், உலகக்கோப்பையை வெல்லும் என அவர் மறைமுகமாக தெரிவித்துள்ளார் என்பது தெரிகிறது. எது எப்படியோ, மைக்கல் வாகனின் டுவீட் பளிக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Last Updated : Jun 28, 2019, 11:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details