கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை மக்களுக்கு ஓரளவிற்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் சென்னை மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உங்களுக்காகவாவது முகக்கவசம் அணிந்து கவனமுடன் இருங்கள் - அமைச்சர் வேலுமணி - கரோனா தொற்று
சென்னை: உங்களுக்காகவாவது முகக்கவசம் அணிந்து கவனமுடன் இருங்கள் என அமைச்சர் வேலுமணி சென்னை மக்களுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.
![உங்களுக்காகவாவது முகக்கவசம் அணிந்து கவனமுடன் இருங்கள் - அமைச்சர் வேலுமணி அமைச்சர் வேலுமணி சென்னை மக்களுக்குக் கோரிக்கை..!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-01:43:59:1594023239-tn-che-03-minister-velumani-devices-to-chennaits-7204894-06072020133140-0607f-1594022500-456.jpg)
அமைச்சர் வேலுமணி சென்னை மக்களுக்குக் கோரிக்கை..!
அதில், "ஊரடங்கு தளர்வுகளை சென்னை மக்கள் தவறாக பயன்படுத்தாமல் பிறர் பாதுகாப்பு மட்டுமின்றி உங்களுக்காகவாவது கவனமுடன் முகக்கவசம் அணிந்து சமூக விலகலை கடைபிடியுங்கள்.
மக்கள் ஒத்துழைப்பின்றி COVID19 உடனான போரை எந்த அரசும் முழுவதுமாக வெல்ல இயலாது என்பதையே பல நாடுகள் நமக்கு கற்றுத்தரும் பாடம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.