இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராஜீவ் பன்சால், 'ஏர் இந்தியா நிறுவனத்தின் வருவாயை அதிகரிக்கும் நோக்கின் நிர்வாக கட்டமைப்பின் உயர்மட்டத்தை சீராக அதிகரிக்க முயற்சிக்கிறோம், அதே நேரத்தில் எங்கள் செலவையும் கட்டுப்படுத்த முயற்சிக்கிறோம்.
பொருளாதார ரீதியாக அரசாங்கத்தை முழுமையாக சார்ந்து இருப்பதைக் குறைக்க முயற்சித்து வருகின்றோம். மேலும் கடன், குத்தகை வாடகை, ஊழியர்களின் செலவுகள் மற்றும் இயக்க செலவுகளைக் குறைப்பதன் மூலம் செலவுகளைக் குறைக்க முயற்சிக்கிறோம்.
நாங்கள் விமானிகள், கேபின் குழுக்கள் மற்றும் பிற பணியாளர் பிரிவுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மேலும் அனைத்து விமான நிறுவனங்களும் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினார். அவ்வாறு செலவுக் குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடாவிட்டால் ஏர் இந்தியா நிறுவனம் பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடும்' எனவும் ராஜீவ் பன்சால் தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியா அரசாங்க சார்புநிலையை விரும்பினாலும், கரோனா நெருக்கடியின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, தற்போதைய நிலைமையில் மத்திய அரசால் அதிகளவில் முதலீடு செய்ய இயலாது. இதன்காரணமாக மத்திய அரசு தனியார்மயமாக்கல் முயற்சியில் ஈடுபட்டு வருதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.