கிரிக்கெட் திருவிழா என ரசிகர்களால் கொண்டாடப்படும் 12ஆவது உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் தொடங்கியது. இந்நிலையில், இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இந்தத் தொடரின் முதல் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.
இதில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டூ ப்ளஸிஸ் முதலில் பந்துவீச தீர்மானித்தார். காயம் காரணமாக ஸ்டெயின் இப்போட்டியில் விளையாடததால், அவருக்கு பதிலாக, ட்வெயின் ப்ரேடோரியஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சமீபகாலமாக, இங்கிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட்டில் நல்ல ஃபார்மில் இருப்பதால், இப்போட்டியில் வெற்றியுடன் தொடரை தொடங்கும் என கிரிக்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர். ஜானி பெயர்ஸ்டோவ், ஜேசன் ராய், பட்லர், மோர்கன் என அதிரடி பேட்ஸ்மேன்கள் அடங்கிய இங்கிலாந்து அணியை, தென்னாப்பிரிக்கா அணியின் பந்துவீச்சாளர்கள் எவ்வாறு கட்டுப்படுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இங்கிலாந்து அணி விவரம்: ஜேசன் ராய், ஜானி பெயர்ஸ்டோவ், ஜோ ரூட், இயான் மோர்கன், பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், லியாம் பிளங்கட், ஆர்ச்சர், அடில் ரஷித்
தென்னாப்பிரிக்கா அணி விவரம்: ஆம்லா, டி காக், டூ ப்ளஸிஸ், ஏய்டன் மார்க்ரம், வான் டர் டுசேன், டுமினி, ஃபிலுக்வாயோ, ப்ரேடோரியஸ், ரபாடா, நிகிடி, இம்ரான் தாஹிர்