தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 28, 2020, 7:54 PM IST

ETV Bharat / briefs

ரூ.19.17 கோடி செலவில் இரும்புக் குழாய் பதிக்கும் பணி தொடக்கம்!

சேலம்: ஆத்தூர் குடிநீர் திட்டத்திற்கு 19 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பில், இரும்புக் குழாய் பதிக்கும் பணியை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கிவைத்தார்.

19.14 கோடி ரூபாய் செலவில் இரும்பு கம்பி பதிக்கும் பணி தொடக்கம்!
Salem water plant plan

சேலம் மாவட்டம், காரிப்பட்டி அடுத்த மேட்டுப்பட்டியில் ஆறு லட்சம் லிட்டர் கொள்ளளவில் நீரேற்று நிலையம் உள்ளது. இது ஆத்தூர் - நரசிங்கபுரம் நகராட்சிகளின் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் ஒரு பகுதி ஆகும்.

சேலம் அம்மாபேட்டையில் இருந்து, 11 கி.மீ., தூரமுள்ள மேட்டுப்பட்டி நீரேற்று நிலையத்துக்கு இடைப்பட்ட பகுதியில் சிமென்ட் குழாய் பதித்து 30 ஆண்டாகிவிட்டது.

தற்போது அது சேதமாகி, அடிக்கடி தண்ணீர் வீணாவதாக புகார் எழுந்தது. பலமுறை சீரமைத்தும், தண்ணீர் வெளியேறுவதைத் தடுக்க முடியவில்லை. இதனால், 19 கோடியை 17 லட்சம் ரூபாய் மதிப்பில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, சிமென்ட் குழாயை அகற்றிவிட்டு, 70 செ.மீ விட்டமுள்ள இரும்புக் குழாய், 11.4 கி.மீ., தூரத்துக்கு புதிதாக பதிக்கப்படுகிறது .

இந்தப் பணியை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி, இன்று( ஜூன் 28) தொடங்கி வைத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details