தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கலுக்கு நீர்வரத்து தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கர்நாடக அணைகள் கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட 4,650 கனஅடி நீர், கபினி அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட 1,500 கன அடி நீர் தமிழ்நாடு எல்லை பிலிகுண்டுலு வந்தடைந்தது. இந்நிலையில் நேற்று(ஜூலை 22) ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்துன் அளவு 7 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இன்று(ஜூலை 23) 700 கனஅடி நீர் அதிகரித்து 7,700 கன அடியாக நீர்வரத்து உயர்ந்து வருகிறது.
ஒகேனக்கல் நீர்வரத்து 7,700 கன அடியாக உயர்வு - கிருஷ்ணராஜ சாகர் அணை
தருமபுரி: கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் 700 கனஅடி அதிகரித்து ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 7,700 கன அடியாக இன்று (ஜூலை23) உயர்ந்துள்ளது.
Water level increased
இம்மாதம் இறுதியில் கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டிய தண்ணீரை திறந்துவிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் தொடர்ந்து வேகமாக நிரம்பி வருகிறது மழை தொடர்ந்து அதிகரித்தால் இன்னும் சில நாள்களில் கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு காவிரியிலிருந்து தண்ணீர் திறந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.