தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

லண்டனில் தொடரும் கறுப்பின மக்களின் உரிமைக்கான போராட்டம்!

லண்டன் : 2019ஆம் ஆண்டைக் காட்டிலும், 2020ஆம் ஆண்டில் கறுப்பின மக்கள் மீது காவலர்களால் நடத்தப்படும் தாக்குதல் அதிகரித்துள்ளன. காவல் துறையினரின் தாக்குதல்களில் உயிரிழந்த கறுப்பின மக்களின் எண்ணிக்கை 43 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

watch-anti-racism-protest-in-london
watch-anti-racism-protest-in-london

By

Published : Jun 14, 2020, 11:40 AM IST

அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில், காவலர் ஒருவரின் பிடியில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கர் உயிரிழந்த சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவில் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் ‘Black live's matter’ என்ற முழக்கங்களுடன் நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளன.

உலகையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி இருக்கும் கரோனா பரவலையும் பொருட்படுத்தாமல், இத்தாலி, டென்மார்க், ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் கறுப்பின மக்களுக்கு நீதி கேட்டும் நிறவெறிக்கு எதிராகவும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், இங்கிலாந்து நாட்டில் நிறவெறித் தாக்குதல்களாலும், காவல் துறையினரின் அத்துமீறல்களாலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நீதி கேட்டு அந்நாட்டு மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

லண்டனில் தொடரும் கறுப்பின மக்களின் உரிமைக்கான போராட்டம்

இதில், போராட்டக்காரர்கள் லண்டன் ஹைட் பூங்காவில் ஒன்று கூடி, அங்கிருந்து பேரணியாக நடந்து சென்று பக்கிங்ஹாம் அரண்மனை, இங்கிலாந்து நாடாளுமன்ற சதுக்கம் உள்ளிட்ட பல முக்கிய இடங்களைக் கடந்து டவுனிக் தெருவில் நிறைவு செய்தனர். அதே நாளில், கெட்டெரிங் நகரில் அமைதியான முறையில் ஒன்றுத்திரண்ட 500க்கும் மேற்பட்டோர் அமெரிக்க அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர்.

இந்தப் போராட்டத்தின்போது காவல் துறையினர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களை ஏந்தியும், அந்நாட்டின் அதிபர் போரிஸ் ஜான்சனை போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கக்கோரியும் போராட்டக்காரர்கள் அழைப்பு விடுத்தனர்.

ஜார்ஜ் ஃப்ளாய்டிற்காக நீதி கேட்டு நடைபெற்று வரும் லண்டன் போராட்டங்களில் கறுப்பின மக்களை அடிமைப்படுத்திய ஆதிக்க வணிகர்கள், அரசியல் தலைவர்கள், அரசர்கள் ஆகியோரின் சிலைகள் அப்புறப்படுத்தப்பட்டு வருவது கவனிக்கத்தக்கது.

உலகம் முழுவதும் கடந்த 2019ஆம் ஆண்டைக் காட்டிலும், 2020ஆம் ஆண்டில் கறுப்பின மக்கள் மீதான காவலர்களின் தாக்குதல் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அது மட்டுமின்றி, காவல் துறையினரின் தாக்குதலில் உயிரிழந்த கறுப்பின மக்களின் எண்ணிக்கை 43 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

2020ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் 606 கறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இது கடந்த ஆண்டைக் காட்டிலும் எட்டு சதவிகிதம் அதிகரித்துள்ளதாவும் பன்னாட்டு மனித உரிமை அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details