விருதுநகர் மாவட்டத்தில் இன்று புதிதாக 28 நபருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது. இதன் மூலம் மொத்த பாதிப்படைந்து எண்ணிக்கை 283 ஆனது.
மேலும் 153 நபர்கள் முழுமையாக குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தற்போது 127 பேர் விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, ராஜபாளையம் போன்ற மாவட்டத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஏற்கனவே கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், காவல்துறையினர் போன்ற பலருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்திரிக்கையாளருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டது.
தற்போது 108 ஆம்புலன்சில் லேப் டெக்னீசியனாக இருப்பவருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட நபர் வசித்து வந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள மக்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.