தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

கிராம மக்கள் முற்றுகை போராட்டம்! - Tharna protest

திருவண்ணாமலை: 100 நாள் வேலை திட்டத்தினை தங்கள் கிராமத்தில் செயல்படுத்த கோரி கிராம மக்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

100 நாள் வேலை கோரி  கிராம மக்கள்,  முற்றுகை போராட்டம்
100 நாள் வேலை கோரி கிராம மக்கள்,  முற்றுகை போராட்டம்

By

Published : Jun 13, 2020, 3:51 PM IST

திருவண்ணாமலையை அடுத்த கீழ்கரிப்பூர் ஊராட்சி மன்றத் தலைவராக கலாவதி அன்பழகன் உள்ளார். இவர் தலைவராக பொறுப்பேற்ற பின்பு அங்கு பணிதள பொறுப்பாளராக பணியாற்றி வந்த சத்யா, ராஜகுமாரி ஆகியோரை மாற்றிவிட்டு புதியதாக கஸ்தூரி மற்றும் தனலட்சுமி ஆகியோரை நியமிக்க திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தீர்மானம் நிறைவேற்றி மனு அளித்துள்ளார்.

இதற்கு எதிரிப்பு தெரிவித்த திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன், அந்த பகுதியில் நடைபெறும் 100 நாள் வேலை திட்டத்தினை நிறுத்தியுள்ளார்.

இதனால் கிராம மக்கள் 100 நாள் வேலை திட்டத்தில் பணிசெய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து ஊராட்சி மன்றத் தலைவரின் செயலை கண்டித்தும், தங்கள் பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தினை செயல்படுத்த கோரியும், கீழ்கரிப்பூர் கிராமத்தினை சோந்த 100 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் நேற்று திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை முற்றுகையிட்டு, தகுந்த இடைவெளியுடன், முகக்கவசங்கள் அணிந்து, அலுவலகத்தின் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: ஓபிசி இடஒதுக்கீடு விவகாரம்: உயர் நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மனு

ABOUT THE AUTHOR

...view details