தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

தங்க மங்கை இலக்கியாவிற்கு தங்கச்செயின் பரிசளித்த விஜய்சேதுபதி ரசிகர்கள்

சென்னை: மலேசியாவில் நடைபெற்ற ஆசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற இலக்கியாவிற்கு நடிகர் விஜய்சேதுபதியின் ரசிகர் மன்றத்தினர் தங்கச்செயின் பரிசளித்து பாராட்டியுள்ளனர்.

தங்க மங்கை இலக்கியாவிற்கு  தங்கச்செயின் வழங்கிய விஜய்சேதுபதி ரசிகர்கள்

By

Published : May 16, 2019, 7:33 AM IST

பெரம்பலூர் மாவட்டம் பிலிமிசை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவர் சென்னை கோயம்பேடு சந்தையில் கூலி தொழில் செய்து வருகிறார். இவரது மகள் இலக்கியா (14) தனியார் பள்ளி ஒன்றில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

சிறுவயதில் இருந்தே கராத்தே மீது அதிக ஈடுபாடு கொண்ட இலக்கியா, மே 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றார்.

இலக்கியாவை நேரில் சந்தித்து வாழ்த்திய விஜய் சேதுபதி ரசிகர் மன்ற செயலாளர் குமாரன், சென்னை மாவட்ட தலைவர் தேவா

இதையடுத்து, 19 வயதுக்கு உட்பட்ட மகளிர் பிரிவில் கலந்துகொண்ட இலக்கியா இரண்டு தங்கப்பதக்கங்களை வென்று அசத்தினார். கராத்தேவில் தங்கம் வென்ற தங்கமங்கையை ஊக்கப்படுத்தும் விதமாக, அகில இந்திய மக்கள் செல்வன் நடிகர் விஜய்சேதுபதி ரசிகர் மன்ற செயலாளர் குமரன், சென்னை மாவட்ட தலைவர் தேவா ஆகியோர் இலக்கியாவை நேரில் சந்தித்து, தங்கச் செயின் வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

தங்க மங்கை இலக்கியாவிற்கு தங்கச்செயின் வழங்கிய விஜய் சேதுபதி ரசிகர் மன்ற செயலாளர் குமாரன், சென்னை மாவட்ட தலைவர் தேவா

ABOUT THE AUTHOR

...view details