திருவள்ளூர் மாவட்டம், சென்றன்பாளையம் பஜனை கோயில் தெருவில் வசித்து வந்தவர், லோகேஷ் குமார்.
இவர், நேற்றிரவு (ஜூன் 13) சீத்தஞ்சேரியிலிருந்து ஊத்துக்கோட்டை நோக்கி, இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, எதிரே வந்த வாகனம் இவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே லோகேஷ் குமார் உயிரிழந்தார்.
எதிரே வந்த இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த லோகநாதன் (60) என்பவர், திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் வட்டார காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விபத்தில் இறந்த லோகேஷ்குமார், விஜய் ரசிகர் மன்றத்தின் இளைஞர் செயலாளர் பொறுப்பில் இருந்துள்ளார்.
இதனால், அரசு மருத்துவமனையில் திடீரென 50க்கும் மேற்பட்டவர்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.