நடிகர் சுஷாந்த் சிங் கடந்த 14ஆம் தேதி தனது வீட்டில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துக் கொண்டார். அவரின் இழப்பு திரைத் துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அவரது தற்கொலை முயற்சிக்கு nepotism தான் காரணம் என்று சமூக வலைதளங்களில் தீயாகப் பரவிவருகிறது.
இந்நிலையில் இது குறித்து இயக்குநர் வெங்கட் பிரபுவின் தங்கையும், ஆடை வடிவமைப்பாளரான வாசுகி பாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "சுஷாந்த் போல தமிழ் சினிமாவிலும் பலர் இருக்கின்றார்கள். அவர்களுக்கும் சரியான ஊதியம், ஆதரவு, அங்கீகாரம் கிடைக்கவில்லை. இருப்பினும் அவர்கள் புன்னகையுடன் தைரியமாக கேமரா முன்பு தோன்றுகிறார்கள்.
சிலர் என்னிடம் இதைப்பற்றி கூறினாலும், தங்களது வலிகளை மௌனத்திற்குப் பின்னால் மறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அது போன்ற நபர்கள் இப்போதும் எப்போதும் இருப்பர் என்பதை நினைவுகொள்ளுங்கள். அஜித்தும் அதை திரைத் துறையில் சந்தித்துதான் தற்போது இந்த நிலைமையில் உள்ளார்" என்று பதிவிட்டுள்ளார்.