வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
வேலூரில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று உறுதி - Vellore Latest News
வேலூர்: மாவட்டத்தில் மேலும் எட்டு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

vellore 8 covid -19 positive case
அந்த வகையில், வேலூரில் உள்ள சி.எம்.சி தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் நான்கு பேர், சென்னையில் இருந்து சேலம் திரும்பிய நான்கு பேர் என மொத்தம் எட்டு பேருக்கு இன்று கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை, வேலூர் மாவட்டத்தில் அரசு கணக்கீட்டின் படி 72 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியர் அளித்து வரும் தகவலின் படி 112 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 20 வயது கர்ப்பிணி பெண் உள்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.