வேலூர் மாவட்டத்தில் வேகமாகப் பரவிவரும் கரோனா தீநுண்மியால் இதுவரை 408 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா தீநுண்மி பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக வேலூர் மாவட்டத்தில் கடைகள் இயங்க புதிய நேரக்கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சில்லறை வியாபாரம் செய்யும் காய்கறி, மளிகைக் கடைகள்- திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாள்கள் மட்டும் காலை ஆறு மணிமுதல் மாலைவரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
துணிக்கடைகள், ஹார்டுவேர் கடைகள், இதர கடைகள், நகைக் கடைகள் ஞாயிறு, செவ்வாய், வியாழன், சனி ஆகிய நான்கு நாள்கள் மட்டும் காலை ஆறு மணிமுதல் மாலை ஆறு மணிவரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இறைச்சிக் கடைகள் ஞாயிறு, புதன் ஆகிய இரு நாள்களில் காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மொத்த வியாபாரம் செய்யும் மளிகை, பருப்பு, அரிசி, நவதானியம், காய்கறிக் கடைகள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாள்கள் மட்டும் இரவு 10 மணி முதல் காலை ஆறு மணிவரை மட்டும் செயல்படும்.
உணவகங்கள், பேக்கரிகள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாள்கள் மட்டும் காலை ஆறு மணிமுதல் மாலை ஆறு மணிவரை செயல்படும். பார்சல்கள் மட்டுமே வழங்கப்படும்.