கரோனா பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கில் தளர்வளிக்கப்பட்டதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த 5 நாள்களில் 230ஆக அதிகரித்துள்ளது
இந்நிலையில், நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில், பணியாற்றி வந்த காவலருக்கு கரோனா தொற்றுநோய் இன்று (ஜூன் 26) உறுதி செய்யப்பட்டுள்ளது.
குடும்பத்துடன் தஞ்சையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிவொன்றுக்கு சென்று வந்துள்ளார். அதைத் தொடர்ந்து, அவருக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்துவந்ததை அடுத்து, அவருக்கு சளி ரத்த மாதிரிகள் நாகை அரசு மருத்துவமனையில் எடுக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.