தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

கருங்கல்பாளையம் சோதனைச்சாவடியில் தீவிர வாகனச் சோதனை! - vehicle without E-pass not allowed

ஈரோடு: கருங்கல்பாளையம் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாமல் நடந்து செல்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இ-பாஸ் இல்லாத இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன.

vehicle without E-pass not allowed in erode district
vehicle without E-pass not allowed in erode district

By

Published : Jul 1, 2020, 3:20 PM IST

ஈரோடு, நாமக்கல் மாவட்ட எல்லைப் பகுதியான ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி சோதனைச் சாவடியில் காவல்துறையினர் தொடர்ந்து தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்திலிருந்து இ-பாஸ் இல்லாமல் நடந்து செல்வோர் மட்டும் ஈரோடு மாவட்டத்திற்குள் அனுமதிக்க முடிவு செய்து அவர்களிடம் இருக்கும் அடையாள அட்டைகள், ஆவணங்களைக் காட்டச் சொல்லி அவர்கள் பெயர், முகவரி, அவர்கள் ஈரோட்டில் பணிபுரியும் நிறுவனம், தொடர்பு எண் ஆகியவற்றை கேட்டுப் பதிவு செய்து கொண்டதற்கு பின்னரே அவர்கள் அனுமதிக்கப்பட்டுவருகின்றனர்.

நடந்து செல்வோர் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது விபரங்களைத் தெரிவித்துச் செல்கின்றனர். இதனிடையே காவல்துறையினர் கூட்டத்தைக் கட்டுப்படுத்திட ஒலிபெருக்கி மூலமும் தொடர்ந்து அறிவிக்கப்பட்டுவருகிறது.

இ-பாஸ் இல்லாமல் இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. சோதனைச் சாவடியில் கூடுதல் காவலர்கள் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளதால் கருங்கல்பாளையம் சோதனைச் சாவடியில் போக்குவரத்து நெருக்கடி ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

ABOUT THE AUTHOR

...view details