தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

வேன் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மவுன போராட்டம்! - அரியலூர் மாவட்ட செய்திகள்

அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே தாபழூரில் வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் மவுன போராட்டம் நடத்தினார்கள்.

வேன் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் மௌன போராட்டம
வேன் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் மௌன போராட்டம

By

Published : Jun 30, 2020, 10:10 AM IST

கரோனா ஊரடங்கு காரணமாக பதிக்கப்பட்ட வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் கடந்த ஆறு மாத காலங்களாக மிகுந்த பாதிப்படைந்துள்ளனர்.

இதனால், வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனத்திற்கான ஆறுமாத கடன்களை கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதையடுத்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் மவுன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, “மூன்று மாதத்திற்கான வங்கிகளுக்கு கட்ட வேண்டிய வட்டி மற்றும் நிலுவை தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும்.

வாகனங்களுக்கான சாலை வரியை ஆறு மாதத்துக்கு முற்றிலுமாக தள்ளுபடி செய்ய வேண்டும். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஓட்டுநர், உரிமையாளர்கள் குடும்பங்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்” என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்.

இதையும் படிங்க: வீடு புகுந்து கர்ப்பிணியை தாக்கிய காதலன்: இளம்பெண் தீக்குளிப்பு

ABOUT THE AUTHOR

...view details