தமிழ்நாட்டில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை மாநகராட்சி, வருவாய்த்துறை , காவல்துறை, சுகாதாரத்துறை ஆகியோர் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
கடந்த சில நாள்களாக வெளி மாவட்டங்களில் இருந்து ஈரோடு வந்தவர்கள், அவர்களுடன் இருந்தவர்கள் ஆகியோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அதனை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைஎடுக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, ஈரோடு பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக நேதாஜி தினசரி காய்கறி சந்தையானது இயங்கி வருகின்றது.
இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. நாளொன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள்,பொதுமக்களும் இந்த காய்கறி சந்தைக்கு வந்து செல்கின்றனர்.
இவர்களுக்கு கரோனா பரிசோதனை முகாம் நடத்த வேண்டும் என்று நேதாஜி தினசரி காய்கறி சங்கத்தினர் மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.
இதனை ஏற்று இன்று கரோனா பரிசோதனை முகாம் நடைபெற்று வருகிறது. இதனை மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.