திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம், நம்மியந்தல் கிராமத்திலுள்ள, வேடியப்பன் கோயிலுக்குச் சொந்தமான குளக்கரையைச் சுற்றி 3.75 ஏக்கர் நிலங்களை கடந்த 30 வருடங்களாக அதே கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தனர்.
தற்போது, ராந்தம் ஊராட்சியில் ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, வருவாய் மற்றும் காவல் துறையினரின் உதவியுடன், ஜேசிபி இயந்திரம் கொண்டு ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டன.