தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

நடந்தது தற்கொலை அல்ல ஆணவப் படுகொலை: மாவட்ட ஆட்சியரிடம் விசிக புகார் - VCK Protest Against Women Murder In Thanjavur

புதுக்கோட்டை:ஆலங்குடியில் பெண்ணுக்கு நிகழ்ந்தது தற்கொலை கிடையாது, ஒரு ஆணவப்படுகொலை. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

VCK Protest Against Women Murder In Thanjavur
VCK Protest Against Women Murder In Thanjavur

By

Published : Jun 15, 2020, 11:48 PM IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 நால்களுக்கு முன்பு ஒரு பெண் தனது பெற்றோர்கள் தன் காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் தற்கொலை செய்துகொண்டார் எனவும் அதனை பெற்றோர்கள் வெளியில் சொல்லாமல் மறைத்து எரித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால், அந்தப் பெண் தற்கொலை செய்துகொள்ளவில்லை அவரை அவரது பெற்றோரும், உறவினர்களும் கொலை செய்துவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெண்ணின் காதலர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

இந்நிலையில், இன்று புதுக்கோட்டை மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற ஆணவப்படுகொலை தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது. அதனைத் தடுப்பதற்கு தனியாக சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.

இதையும் படிங்க:சொத்துப் பிரச்னை: வீட்டுக்குத் தீவைத்த உறவினர்கள்!

ABOUT THE AUTHOR

...view details