கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன்பு விசிகவினர் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் திருமாவேந்தன் தலைமை வகித்தார்.
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி விசிக சாலை மறியல் போராட்டம்! - Neet Exam
கன்னியாகுமரி: தமிழ்நாட்டில் நீட் தேர்வை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
VCK Party Road Blocking Protest In Kanniyakumari
இப்போராட்டத்தில், தமிழ்நாட்டில் நீட் தேர்வை தடை செய்ய வேண்டும். பிரதமர் கிசான் திட்டத்தில் ஊழல் அலுவலர்களை கைது செய்து அவர்களது வங்கிக் கணக்கில் முறைகேடாக பணம் பெற்றவர்களின் பணத்தை பறிமுதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். இதனால், பேருந்து நிலையம் முன்பு சற்று நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.