பனாஜி: ஜூன் 20ஆம் தேதி வரை இத்திட்டத்தின் கீழ் கோ ஏர் நிறுவனம் 28 விமானங்களை இயக்கியுள்ளது. இத்திட்டத்தின் மூன்றாம் கட்டத்தில், கோ ஏர் (Go Air) விமான நிறுவனம் மூன்று விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது. அந்த விமானங்கள் குவைத்-அகமதாபாத், தமாம்-லக்னோ, அபுதாபி-அகமதாபாத் ஆகிய மூன்று வழித்தடங்களில் இயக்கப்படவுள்ளன.
வந்தே பாரத் திட்டம்: மூன்றாவது கட்டமாக 3 விமானங்களை இயக்கும் கோ ஏர் - business news in tamil
வந்தே பாரத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தில் கோ ஏர் (GoAir) விமான நிறுவனம் மூன்று விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது.
கோ ஏர்
மொத்தம் 2 ஆயிரத்து 451 இந்தியர்கள் குவைத்திலிருந்து அகமதாபாத், கண்ணூர், கொச்சி, லக்னோவிற்கும், 549 பேர் துபாயிலிருந்து கண்ணூர், கொச்சினுக்கு, 544 பேர் அபுதாபியிலிருந்து அகமதாபாத், கண்ணூர், கொச்சிக்கும், 541 பேர் மஸ்கட்டிலிருந்து கண்ணூர், லக்னோவிற்கும், 528 பேர் தோஹாவிலிருந்து கண்ணூர், பெங்களூருவுக்கும், 351 பேர் தமாமிலிருந்து கண்ணூர், லக்னோவிற்கும் கோ ஏர் விமானம் மூலம் வந்தடைந்துள்ளனர்.