தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த அமெரிக்க அதிபர் ! - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

வாஷிங்டன் : அமெரிக்காவின் சுதந்திர தினத்திற்கு வாழ்த்து கூறிய பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நன்றி தெரிவித்தார்.

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த அமெரிக்க அதிபர் !
பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த அமெரிக்க அதிபர் !

By

Published : Jul 5, 2020, 2:42 PM IST

ஆண்டுதோறும் ஜூலை 4ஆம் தேதி ஐக்கிய அமெரிக்காவின் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு 244ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் அமெரிக்க அரசுக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவில், "அமெரிக்காவின் 244ஆவது சுதந்திர தினமான இன்று @பிஓடியூஎஸ் @டொனால்டு ட்ரம்ப் மற்றும் அமெரிக்காவின் மக்களை நான் மனதார வாழ்த்துகிறேன். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான அமெரிக்காவின் சுதந்திரத்தையும் மனிதத்தையும் நாங்கள் மதிக்கிறோம்" என கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "நன்றி என் நண்பரே. இந்தியாவை அமெரிக்கா ஆழமாக நேசிக்கிறது!" என தெரிவித்தார்.

அமெரிக்கா முழுவதும் கருப்பின மக்களின் கிளர்ச்சி நடைபெற்றுவரும் இவ்வேளையில் தெற்கு டகோட்டாவில் நடைபெற்ற அமெரிக்க சுதந்திர தின கொண்டாட்டங்களில் அமெரிக்க ஜனாதிபதி கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details