தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

11ஆம் வகுப்பில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்குவதை ரத்து செய்ய வேண்டும்! - 11ஆம் வகுப்பில் புதிய பாடப்பிரிவுகள்

சென்னை : 11ஆம் வகுப்பில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்குவதை ரத்து செய்ய வேண்டுமென நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

11ஆம் வகுப்பில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்குவதை ரத்து செய்ய வேண்டும்!
11ஆம் வகுப்பில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்குவதை ரத்து செய்ய வேண்டும்!

By

Published : Jun 25, 2020, 6:35 PM IST

இது தொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ராமு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சகம், அண்மையில் 11ஆம் வகுப்பு பாடத்திட்டத்தை மாற்றி அமைப்பதாக அறிவித்தது. அதன்படி, தற்போதுள்ள 6 பாடங்கள் இந்த ஆண்டு முதல் 5 பாடங்களாக குறைக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த திடீர் மாற்றங்கள் காரணமாக மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்.

தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் 95 விழுக்காடு மாணவர்கள் மருத்துவம் படிக்க முயற்சித்து இடம் கிடைக்காமல் போனதால், பொறியியல் துறைகளைத் தேர்ந்தெடுத்து படித்து பட்டம் பெற்றுள்ளனர், தற்போதும் பெற்று வருகின்றனர். இந்நிலையில், ஐந்து பாடங்கள் கொண்ட பிரிவுகள் நடைமுறைக்கு வந்தால் மாணவர்கள் எதிர் காலத்தில் கடும் நெருக்கடியை சந்திக்கும் சூழல் உருவாகும்.

போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு அனைத்துப் பாடங்கள் பற்றிய குறைந்தபட்ச அறிவு இருக்க வேண்டும். இதுபோன்ற குறைந்த பாடப்பிரிவுகள் நடைமுறைக்கு வந்தால் அதன் மூலம் வரும் காலங்களில் மருத்துவம் சாராத பணித்தொகுதிகளுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும். அத்துடன் 5 பாடங்கள் கொண்ட பிரிவு தொடங்கப்படுவதால் மெல்ல கற்கும் மாணவர்கள் மற்றும் கிராமப்புற மாணவர்கள் பெருமளவில் மன அழுத்தத்திற்கு உள்ளாவார்கள்.

ஐந்து பாடங்களை கொண்ட பாடப்பிரிவுகள் மேல்நிலை வகுப்புகளில் தொடங்கப்படும் போது கணிதப்பாடம் அதிகம் பாதிக்கபட வாய்ப்புகள் உள்ளது. கிராமப்புறங்களில் மாணவர்கள் கணிதம் இல்லாத பிரிவுகளில் சேர அதிகம் முற்படுவார்கள். இதனால் வருங்காலத்தில் போட்டித் தேர்வுகளுக்கு பங்கேற்கும் மாணவர்கள் சிரமப்படும் வாய்ப்பு உள்ளது.

இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப்பிரிவை எடுத்து நீட் தேர்வுக்கு தயாராகும் போது இயற்பியல் மற்றும் வேதியியல் பாடப் பகுதிகளில் கணக்கீடு செய்வதில் நிறைய சிரமங்களை ஏற்படுத்தும். இயற்பியல் மற்றும் இயல் வேதியியலில் கணிதப் பாடமானது நகமும் சதையும் போல் இருக்கும். வகை நுண்கணிதம், தொகை நுண்கணிதம் தெரியாமல் அவற்றை புரிந்து கொள்வது இயலாது.

கணிதம் படிக்காமல் போட்டித் தேர்வுகளுக்கு படிக்கும் மாணவர்களுக்கு அரை கிணறு தாண்டி விடுவது போல் ஆகிவிடும். கணிதப் பாடம் இல்லாமல் பாடப்பிரிவுகள் நடைமுறை படுத்துவதால் மாணவர்கள் எதிர்காலத்தில் சிரமப்பட வேண்டிய சூழலும் உருவாகும்.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 50 விழுக்காட்டுக்கும் மேலானவர்கள் மெல்ல கற்கும் மாணவர்கள். அவர்களின் நலனில் பள்ளிக்கல்வித்துறை அக்கறை கொண்டு முதன்மை பாடங்களின் முக்கிய அம்சங்களை அறிந்து இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details