ஊரடங்கு... 9 பேர் பாதிப்பு - சுகாதாரத் துறை
புதுச்சேரி: ஊரடங்கு தளர்விற்கு பிறகு தினமும் 7 முதல் 9 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத் துறை இயக்குனர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "
புதுச்சேரியில் 57 நபர்களுக்கு பரிசோதனையில் கண்டறியப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். 38 பேர் அரசு கதிர்காமம் மருத்துவமனையிலும், 17 பேர் ஜிப்மர் மருத்துவமனை 2 பேர் சேலம் , சென்னை பகுதிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 33 நபர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று மட்டும் 7 பேர் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் மூன்று நபர் தேர்ச்சி பெற்று வீடு திரும்பினர். புதுச்சேரியில் இதுவரை மொத்தம் 90 நபர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். எனவே மக்களிடம் விழிப்புணர்வு அதிகம் தேவை மேலும் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
புதுச்சேரியில் ஊரடங்கு தளர்விற்கு பிறகு தினமும் 7 முதல் 9 பேர் நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.