தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

சுஷாந்த் குடும்பத்தினருக்கு மத்திய சட்ட அமைச்சர் நேரில் ஆறுதல் - சுஷாந்த் சிங் மரணம்

நடிகர் சுஷாந்த் சிங்கின் குடும்பத்தினரை மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

Sushanth singh
Sushanth singh

By

Published : Jun 20, 2020, 7:49 PM IST

தோனி திரைப்பட புகழ் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த வாரம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரின் இழப்பு இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இன்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

அப்போது, சுஷாந்தின் புகைப்படத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அவர், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதில், "சுஷாந்த் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன். மிகவும் திறமையான நடிகர். அவர் இந்த முடிவை எடுத்துவிட்டார் என்பதில் எனக்கு மிகுந்த வருத்தம்" என்று பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details