உலகளாவிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் கோவிட்-19 பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் மூன்றாம் கட்ட அபாய நிலையை எட்டியிருக்கும் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சியுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கட்டுப்பாட்டை மீறி பாதிப்புகள் உயர்ந்துகொண்டே வருதால், வருகின்ற ஜூன் 19 முதல் 30 வரை முழு ஊரடங்கு உத்தரவு தளர்வுகளின்றி அமலுக்கு வருமென தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இன்று (ஜூன் 18) நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ள நிலையில் சென்னை மக்களின் குடிநீர் போன்ற அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன.