தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

சிறுவர்களுக்கான மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டிகள் தொடக்கம் - பேட்மிண்டன்

கடலூர்: 10 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டிகள், கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கியது.

10 வயது உட்பட்டோருக்கான மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம்

By

Published : May 9, 2019, 8:17 PM IST

தமிழ்நாடு மாநில பேட்மிண்டன் கழகம், கடலூர் மாவட்ட பேட்மிண்டன் நல கழகம் இணைந்து நடத்தும், 10 வயது உட்பட்டோருக்கான மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டிகள், கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கியது. இப்போட்டிக்கு மாநிலத் துணைத் தலைவர் ராஜேஷ் பாபு தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ஓம்பிரகாஷ் வரவேற்றார். கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி இப்போட்டியை தொடங்கி வைத்தார்.

கடலூரில் தொடங்கிய 10 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டிகள்

இதில் சென்னை, கடலூர், வேலூர், விழுப்புரம், திருச்சி, மதுரை உள்ளிட்ட 32 மாவட்டங்களில் இருந்து வந்திருந்த சிறுவர், சிறுமிகள் என 240 பேர் கலந்து கொண்டனர். இன்று தொடங்கிய இப்போட்டிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் நடைபெறவுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details