சென்னை நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரம் நெடுஞ்சாலையில் வசித்துவருபவர் வெங்கடேசன். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக இருந்துவருகிறார்.
வெங்கடேசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விலையுயர்ந்த அதிநவீன இருசக்கர வாகனத்தை இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார்.
இவர் இருசக்கர வாகனத்தில் பணிக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு வெளியே நிறுத்திவிட்டு செல்வது வழக்கம். அதேபோல், கடந்த 15ஆம் தேதி இரவு தனது இருசக்கர வாகனத்தை வீட்டிற்கு வெளியே நிறுத்தியுள்ளார்.
மறுநாள் பணிக்குச் செல்வதற்காக வெங்கடேசன் இருசக்கர வாகனத்தைப் பார்க்கும்போது காணாமல் போயுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனே தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவைப் பார்த்துள்ளார்.
அதில், மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டிருந்த அவரது இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.
இது குறித்து அவர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குபதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து இருசக்கர வாகன திருடர்களைத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க:21 குண்டுகள் முழங்க கரோனாவால் மரணித்த இன்ஸ்பெக்டர் பாலமுரளி உடல் நல்லடக்கம்!