தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு! - இருசக்கர வாகனம் தீ விபத்து

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

Two Wheeler Fire In Tirupattur
Two Wheeler Fire In Tirupattur

By

Published : Jun 16, 2020, 3:15 PM IST

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவர், தனது நண்பர் பிரவீன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, செட்டியப்பணுர் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் எதிரில் வந்த மிதிவண்டி, இவர்கள் வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதனால் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டு, திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதனைக்கண்ட அப்பகுதியிலிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இருப்பினும் அங்கிருந்த இளைஞர்கள் சிலர், தீயை அணைக்க முயற்சித்தும் தீ மளமளவென பரவியதால், இருசக்கர வாகனம் முழுவதும் எரிந்து நாசமானது. இந்த விபத்தில் மிதிவண்டியில் வந்த இந்திராநகர் பகுதியைச் சேர்ந்த பச்சையப்பன் என்ற முதியவர் காயமடைந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி காவல் துறையினர், தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:ஓபிசி இட ஒதுக்கீடு: மத்திய அரசு அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details