ஈரோடு மாவட்டம், பன்னீர்செல்வம் பூங்கா அருகே காந்திஜி சாலையில் மாநகராட்சி மகளிர் மருத்துவமனை உள்ளது. இம்மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கர்ப்பிணிகள் இருவருக்கு இன்று (ஏப்.22) கரோனா உறுதி செய்யப்பட்டது.
கர்ப்பிணிகள் இருவருக்கு கரோனா தொற்று!
ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைப் பெற்றுவந்த இரண்டு கர்ப்பிணிகளுக்கு இன்று கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
இதைத்தொடர்ந்து ஈரோடு பெருந்துறை அரசு கரோனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக கர்ப்பிணிகள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் அங்கிருந்த மற்ற நோயாளிகளுக்கும் மாதிரிகள் எடுக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டனர். தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது.
தற்போது வரை கரோனா தடுப்பூசி செலுத்தும் மையமாக மருத்துவமனை இயங்கி வந்தது. ஏப். 24ஆம் தேதிக்குப் பிறகு மீண்டும் வழக்கம்போல் ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்பட்டு, கரோனா தடுப்பூசிகள் போடப்படும் என, மருத்துவமனை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.