திருவண்ணாமலை கீழ்பெண்ணாத்தூர் தாலுகா, வழுதலங்குணம் கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த துரைசாமி மகன் பிரபாகரன்(33). இவர் மீது பலமுறை வழக்குப்பதிவு செய்தும் தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதேபோல் திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு, பஜார்பேட்டை, நேரு தெருவைச் சேர்ந்த பச்சையப்பன் மகன் சங்கர்(40) என்பவரை பலமுறை வழக்குப்பதிவு செய்தும் தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் சேத்துப்பட்டு காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.