தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் சென்னையிலிருந்து தருமபுரி மாவட்டம், சோலை கொட்டாய் என்னும் அவர்களது சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.
இந்நிலையில், தருமபுரி சுகாதாரத்துறை அலுவலர்கள் சென்னையிலிருந்து வந்தவர்களை சோதனை செய்தனர். இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 62 வயதான முதியவர், 8 வயது சிறுமிக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த 62 வயதான முதியவர் சென்னையில் மளிகைக் கடை நடத்தி வந்துள்ளார் என்றும், கரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக குடும்பத்துடன் ஊர் திரும்பியதும் தெரிய வந்தது.
வைரஸ் பாதித்த இருவரும் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.