புதுக்கோட்டை மாவட்ட திருமயம் டவுன் பாப்பாவயலில் தந்தை இறந்த துக்கத்திற்கு சென்னையில் இருந்து வந்த பெண் போலீஸ் ஜோதிக்கு (36) கரோனா தொற்று உறுதியாகி புதுகை ராணி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து அப்பகுதியில் வட்டார மருத்துவ அலுவலர் மனோஜ்குமார், தாசில்தார் சுரேஷ், பிடிஓ. மெய்யப்பன், பஞ்சாயத்து தலைவர் சிக்கந்தர் ஆகியோர் முகாமிட்டு நிவாரணப்பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
அந்தப் பெண்ணின் அருகில் இருந்தவர்கள், அவரது தாய், உறவினர்கள் என ஏழு பேரை தனிமைப்படுத்தியுள்ளனர். அந்தப்பகுதியில் உள்ள மக்கள் வெளியே செல்லவும், வெளிஆட்கள் உள்ளே வரவும் பேரி காடு வைத்து போலீசார் தடை ஏற்படுத்தியுள்ளனர்.