தமிழ்நாட்டில் இன்று புதிதாக ஆயிரத்து 989 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 687ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில் சென்னை தண்டையார்பேட்டை பகுதியிலிருந்து தருமபுரி மாவட்டம் செக்கொடி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தன் மகன்கள் மற்றும் குடும்பத்துடன் சென்னையிலிருந்து ஆட்டோவிலேயே தருமபுரி வந்துள்ளனர்.
அப்போது மாவட்ட எல்லையான காரிமங்கலம் பகுதியில் காவல் துறையினர் ஆட்டோவில் வந்தவர்களை, கரோனா வைரஸ் பரிசோதனைக்காக செட்டிகரை அரசு பொறியியல் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். ஆட்டோ ஓட்டுநர், அவரது மனைவி மற்றும் அவரது இரண்டு குழந்தைகளுக்கு கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்தனர். சோதனை முடிவில் 12 மற்றும் 14 வயதான இரண்டு குழந்தைகளுக்கு மட்டும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அக்குழந்தைகள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் தருமபுரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.