விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், சாமிபுரம் காலனியில் திருப்பதி என்பவருக்கு சொந்தமான அச்சகம் உள்ளது. அங்கு பிரபல பீடி நிறுவனங்களான செய்யது பீடி, காஜாபீடி, கணேஷ் பீடி, கேரளா தினேஷ் பீடி உள்ளிட்டவற்றின் பீடி லேபிள்கள் அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
போலி பீடி லேபிள்கள் அச்சடித்த இருவர் கைது - போலி பீடி லேபிள்கள் அச்சகம்
விருதுநகர் : சிவகாசியில் போலி பீடி லேபிள்கள் அச்சடித்த அச்சகத்திற்கு சீல் வைத்து இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Fake printing press sealed In Virudhunagar
மேலும், இது குறித்து செய்யது பீடி மேலாளர் முகமது பிலால் அளித்த புகாரின் அடிப்படையில், விருதுநகர் அறிவுசார் சொத்தூரிமை அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயசித்ரா தலைமையில் நான்கு பேர் கொண்ட குழுவினர் சிவகாசி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது போலி லேபிள்கள் அச்சடிக்கப்படுவதைக் கண்டறிந்த காவல் துறையினர், அந்த அச்சகத்திற்கு சீல் வைத்து திருப்பதி (வயது 25), முத்து (வயது 40) ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர்.