தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

சம்பங்கி பூ விளைச்சல் அதிகரிப்பு! - சம்பங்கி பூ விளைச்சல்

தருமபுரி : சம்பங்கி பூ விளைச்சல் அதிகரித்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tuber rose
Tuber rose

By

Published : Jun 15, 2020, 11:09 PM IST

தருமபுரி மாவட்டத்தில், செட்டிகரை, நீலாபுரம், இண்டூர், அதகப்பாடி, பெரியாம்பட்டி, காரிமங்கலம் ஆகியப் பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக, சம்பங்கி பூ ஆண்டு முழுவதும் மகசூல் கிடைப்பதால், இப்பகுதி விவசாயிகள் சம்பங்கி பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த ஆண்டு பயிரிடப்பட்டுள்ள சம்பங்கி பூவின் விளைச்சல் அதிகரித்துள்ளது. பூக்களின் விலை கிலோ 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details