இது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் அடுத்தடுத்த மாதங்களில் கரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும் என்று தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அளித்திருப்பதாகக் கூறப்படும் அறிக்கையை பழனிசாமி அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடவேண்டும்.
'எம்ஜிஆர் மருத்துவப் பல்கலை. அறிக்கையை மாநில அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடவேண்டும்' - டிடிவி தினகரன் அறிக்கை
டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அறிக்கையை, மாநில அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடவேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
பாதிப்பு ஆயிரங்களில் இருக்கும்போதே, அரசு மருத்துவமனைகள் நிரம்பி விட்டன. தனியார் மருத்துவமனைகளையும் அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்களைப் பயன்படுத்துவது பற்றிய திட்டமோ, செயல்பாடோ இருப்பதாகவும் தெரியவில்லை.
மழைக்காலமான செப்டம்பர், அக்டோபரில் கரோனா உச்சத்திற்குப் போனால், என்ன செய்வது? சென்னையில் வடிகால்களைச் சரிசெய்தல் உள்ளிட்ட பணிகளை இப்போதே செய்தால்தான் மழைக்கால பாதிப்புகளோடு சேர்த்து, கரோனா பாதிப்புகளையும் எதிர்கொள்ள முடியும்' என்று தெரிவித்துள்ளார்.