தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி - Try to break into the ATM machine

ராமநாதபுரம்: தங்கச்சிமடத்தில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது.

தங்கச்சிமடத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
தங்கச்சிமடத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

By

Published : Jul 13, 2020, 2:17 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பேருந்து நிறுத்தம் பகுதியில் இந்தியன் வங்கி சார்பில் ஏடிஎம் இயந்திரம் மற்றும் பணம் செலுத்தும் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.

நேற்று (ஜூலை12) முழு ஊரடங்கு காரணமாக மக்கள் நடமாட்டம் இல்லை. இதையடுத்து இவ்விரண்டு இயந்திரங்களையும் உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் கை வரிசை காட்ட முயன்றுள்ளனர்.

எனினும் இயந்திரத்தை திறக்க முடியாததால் அப்படியே விட்டுச் சென்று விட்டனர். இந்நிலையில், இன்று காலை இங்கு பணம் எடுக்கச் சென்ற வாடிக்கையாளர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தங்கச்சிமடம் காவலர்கள், தடயவியல் நிபுணர்கள் ஏடிஎம் மையத்தில் கைரேகைகளை எடுத்தும், சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தும் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: ஜீவன் ரக்க்ஷ பதக் விருதுகளுக்கு விண்ணப்பங்கள் கோரல்!

ABOUT THE AUTHOR

...view details