தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

வாஷிங்டன் நகரத்திலிருந்து தேசிய காவல் படை வெளியேற ட்ரம்ப் உத்தரவு

தேசிய காவல் படையினரை வாஷிங்டனிலிருந்து வெளியேறுமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

trump
trump

By

Published : Jun 8, 2020, 3:26 AM IST

Updated : Jun 8, 2020, 7:43 AM IST

அமெரிக்காவில் மினியாபொலிஸ் நகரில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கர், மே 25ஆம் தேதி காவலர்களால் கொல்லப்பட்ட சம்பவம், அந்த நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்கா போன்ற ஒரு வளர்ந்த நாட்டில் இன்னமும் இப்படி நிறவெறியா என்று உலகின் பல்வேறு நாடுகளில் இருக்கும் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதற்கிடையில், அதிபர் ட்ரம்ப், நேரத்தை வீணடிக்காதீர்கள் என்று கூறியதாகத் தெரிகிறது.

மேலும், ட்ரம்பின் இந்தப் பேச்சும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனிடையே இந்தச் சம்பவத்திற்கு நீதி கேட்டு அமெரிக்காவில் பல இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது. வெள்ளை மாளிகை அருகில் போராட்டம் தீவிரமடைந்துள்து.

இந்தப் போராட்டத்திற்குப் பலதரப்பு மக்களும், பிரபலங்களும் தங்களின் ஆதரவைத் தெரிவித்துவருகின்றனர். இச்சூழலில், அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டார்.

அதில், "டி.சி.யில் எதிர்பார்த்த அளவைவிட மிகக் குறைந்த கூட்டமே காணப்படுகிறது. இதற்காகத் தேசிய காவலர், ரகசிய சேவை, டி.சி. காவலர்கள் ஆகியோர் நன்றாகப் பணிகளைச் செய்துவருகின்றனர். அவர்களுக்கு நன்றி" எனப் பதிவிட்டார்.

ட்ரம்பின் இந்தப் பதிவு, நாட்டு மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கனடாவில் நடைபெற்ற போராட்டத்தில் யாரும் எதிர்பாராதவிதமாக, அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ போராட்டத்தில் கலந்துகொண்டு, முழங்காலிட்டு தனது ஆதரவை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம்: போராட்டக்காரரை கீழே தள்ளி மண்டையை உடைத்த காவலர்கள்

Last Updated : Jun 8, 2020, 7:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details