திருச்சி மாவட்டம் பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு தமிழ் தேசியப் பேரியக்கம் சார்பில் தொடர் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
மத்திய அரசு வேலையில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கக்கோரி போராட்டம்! - tamil desiya periyakkam maniyarasan
திருச்சி: மத்திய அரசு நிறுவனங்களில் 90 விழுக்காடு தமிழர்களுக்கே பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ் தேசியப் பேரியக்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
![மத்திய அரசு வேலையில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கக்கோரி போராட்டம்! Protest](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-01:35:25:1600416325-tn-tri-01-ponmalai-protest-script-photo-7202533-18092020123352-1809f-1600412632-243.jpg)
Protest
அந்த வகையில் போராட்டம் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வந்தது. கடைசி நாளான இன்று தமிழ் தேசியப் பேரியக்கத் தலைவர் மணியரசன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
அதில், தமிழ்நாட்டில உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கு 90 விழுக்காடு வேலை வழங்க வேண்டும். பத்து விழுக்காடுக்கும் மேல் பணியாற்றும் வெளிமாநிலத்தவரை வெளியேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.