திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம் நாச்சிகுறிச்சி ஊராட்சிக்குட்பட்ட வாசன் வேலி பகுதியில் உள்ள மகாத்மா காந்தி பிரதான சாலையை, புதிதாக தார்ச்சாலையாக அமைக்க முடிவுசெய்யப்பட்டது. இதற்காக 20 லட்சம் ரூபாய் மதிப்பில் மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, தார்ச்சாலை அமைக்கும் பணிகளை சிறுபான்மை நலத்துறைஅமைச்சர் வளர்மதி இன்று பூமி பூஜைபோட்டு தொடங்கிவைத்தார். இதேபோல், வாசன் நகர் 10ஆவது குறுக்குத் தெருவில் தார்ச்சாலை அமைக்கும் பணியையும், பூமி பூஜைபோட்டு அவர் தொடங்கிவைத்தார்.