தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு முன்னாள் ராணுவத்தினர் அஞ்சலி - திருச்சி மாவட்ட அண்மை செய்திகள்

திருச்சி: சீன தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு முன்னாள் ராணுவத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் ராணுவத்தினர்
முன்னாள் ராணுவத்தினர்

By

Published : Jun 18, 2020, 1:22 PM IST

இந்திய- சீன எல்லைப் பகுதியான லடாக்கில் கடந்த 16ஆம் தேதி இரு நாட்டிற்கும் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர்.

அவர்களின் உடல் நேற்று லடாக்கிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் டெல்லி கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து ராணுவ விமானம் மூலம் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தத் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நாடு முழுவதும்நடைபெறுகிறது.

அந்தவகையில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம், ரங்கநாதர் கோயில் ராஜகோபுரம் அருகே உயிர்நீத்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் திருச்சி மாவட்ட முன்னாள் ராணுவத்தினர் சார்பில் ஏராளமானோர் கலந்துகொண்டு உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

ABOUT THE AUTHOR

...view details