தமிழ்நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 2,532 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 53 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் 59 ஆயிரத்து 377 பேர் இதுவரை கரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். இதில் 32 ஆயிரத்து 754 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.
25 ஆயிரத்து 863 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 36 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.