தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

வன உரிமை சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் - Trible People Community Certificate Issue

ஈரோடு: 2006 வன உரிமை சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி மலைவாழ் மக்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Trible people protest in erode
Trible people protest in erode

By

Published : Nov 23, 2020, 7:40 PM IST

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பெரியார்திடலில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் 2006 வன உரிமை சட்டத்தை அமல்படுத்த வேண்டும், அனைத்து பழங்குடி மக்களுக்கும் கால தாமதமில்லாமல் சாதிச்சான்றிதழ் வழங்க வேண்டும்,

2020 ஆண்டு சுற்றுச்சூழல் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், அனைத்து பழங்குடி மக்களுக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கி கேரளா அரசைப் போல் ரூ.6 லட்சம் மதிப்புள்ள தரமான தொகுப்பு வீடு கட்டிக் கொடுத்திடவேண்டும்,

பழங்குடி மக்கள் நிலத்தை பழங்குடி அல்லாதவர்களுக்கு பத்திரப் பதிவு செய்வதைத் தடைசெய்ய வேண்டும், சத்தி பர்கூர் மலை வட்டாரத்தில் மரவள்ளிக்கிழங்கு கொள்முதலில் வெட்டுக்கூலி வண்டி வாடகை உள்ளிட்ட பிரச்சனை பேசி தீர்வு காண முத்துரப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும்,

ஈரோடு மாவட்ட மலைவாழ் மக்களுக்கு மலையாளி என சாதிச் சான்று வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பர்கூர் கடம்பூர் தாளவாடி உள்ளிட்ட மலைப்பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

அதைத் தொடர்ந்து, கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் ஜெயராமனிடம் அளித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details