சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் வனப்பகுதியில் அடர்ந்த காட்டின் மத்தியில் கோட்டாடை, புதுக்காடு என்ற வனக்கிராமங்கள் அமைந்துள்ளன. இங்கு பழங்குடியினர் வசித்து வருகின்றனர். கோட்டாடை கிராமத்தில் இருந்து வனத்தின் வழியாக செல்லும் புதுக்காடு வழிப்பாதையை இப்பகுதி மக்கள் 100 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆசனூர் வனத்துறையினர் திடீரென நேற்று(ஜூலை 15) மக்கள் பயன்பாட்டில் இருந்த வழிப்பாதையை மூடினர்.
பழங்குடியினர் பாதை அடைப்பு - மக்கள் போராட்டம்! - Erode district sathyamangalam
ஈரோடு: சத்தியமங்கலம் அருகே100 ஆண்டுகளுக்கும் மேலாக பழங்குடியினர் பயன்படுத்திய பாதையை வனத்துறையினர் அடைத்தனர். இதனை எதிர்த்து பழங்குடியின மக்கள் போராட்டம் செய்தனர்.
இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பாரம்பரியமான வழித்தடத்தை மூடக்கூடாது என 100க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பள்ளிக் குழந்தைகள், விவசாயிகள் இந்த ஒரு வழிப்பாதையை பயன்படுத்தி வருவதாகவும், மாற்றுவழி வனத்துறை அமைத்துக் கொடுக்கும் வரை, இந்தப் பாதையை தான் பயன்படுத்துவோம் என வலியுறுத்தினர். இதையடுத்து புதிய பாதை அமைத்துக்கொடுப்பதாக வனத்துறையினர் உறுதிஅளித்ததையடுத்து பழங்குடியினர் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.