தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக்கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

சேலம்: போக்குவரத்து தொழிலாளர்களுக்கு முகக்கவசம் , கிருமி நாசினி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Transport workers protest
Transport workers protest

By

Published : Jun 16, 2020, 1:09 AM IST

ஊரடங்கு உத்தரவில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அரசுப் பேருந்துகள் இயங்கத் தொடங்கியுள்ளன.இதனிடையே, போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததால் நடத்துநர்கள், ஓட்டுநர்கள் நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது .

இந்நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு முகக்கவசம், கையுறை, கிருமி நாசினி வழங்க வேண்டும், சுழற்சி முறையில் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை முன்பு கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட், தொமுச உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில், தமிழ்நாடு அரசைக் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. சேலம் மாவட்ட சிஐடியூ தலைவர் மோகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

இதேபோல், ஆத்தூர், வாழப்பாடி, சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கிவரும் அரசு போக்குவரத்து பணிமனைகள் முன்பு நடத்துநர்கள், ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதையும் படிங்க:மனைவியுடன் வாழ்க்கை நடத்திய இளைஞர்: வெட்டிக் கொன்ற கணவன்

ABOUT THE AUTHOR

...view details