தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

திருநங்கையும் அவரது காதலரும் ஒரே வீட்டில் தற்கொலை!

காரைக்கால்: திருநள்ளாறு பகுதியைச் சேர்ந்த திருநங்கையும் அவரது காதலரும் ஒரே வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திலீப்
திலீப்

By

Published : Jun 21, 2020, 4:17 AM IST

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதியைச் சேர்ந்தவர் திலீப்(26). இவரும், அதே பகுதியைைச் சேர்ந்த திருநங்கை சிவானி(30) என்பவரும் கடந்த ஆறு மாதங்களாகக் காதலித்துவந்துள்ளனர்.

இதுகுறித்து அறிந்த திலீப்பின் பெற்றோர் அவரைக் கண்டித்துள்ளனர். இதனால் திலீப்பும், திருநங்கை சிவாஜியும் தனியாக வீடு எடுத்து வசித்துவந்துள்ளனர். இச்சூழலில் அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இருவரும் வீட்டிலேயே தூக்கிட்டுத் தற்கொலைசெய்து கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நிரவி காவல் துறையினர், இருவரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இருவரில் ஒருவர் மற்றொருவரைக் கொலை செய்துவிட்டு, பின் அவரும் தற்கொலைசெய்து கொண்டாரா? அல்லது இருவரும் சேர்ந்தே தற்கொலை செய்து கொண்டனரா போன்ற கோணங்களில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details