சென்னை விருகம்பாக்கம் கணபதி ராஜ் நகரை சேர்ந்தவர் ரிஷோத் (23). இவர், எம்பிபிஎஸ் மருத்துவப் பட்டப்படிப்பு முடித்து, தற்போது கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள விடுதியில் தங்கி கொண்டு பயிற்சி மருத்துவராக குழந்தைகள் நல வார்டில் பணிபுரிந்து வருகிறார்.
குடும்பப் பிரச்சனை காரணமாக, கடந்த சில நாள்களாக மன உளைச்சலில் ரிஷோத் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு இவர் மருந்து உட்கொண்டு வந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில், இன்று (ஜூலை 11) காலை 5 மணியளவில் விடுதியில் உள்ள அவரது அறை கழிவறைக்குச் சென்ற ரிஷோத், நீண்ட நேரமாக வெளியே வராமல் இருந்துள்ளார்.