கரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசே நலவாரியத்தில் பதிவு செய்த முறைசாரா தொழிலாளர்கள் மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு நிவாரணத்தொகை அறிவித்திருந்தது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சிஐடியுவின் தொழிற்சங்கத்தினர் - CITU petition to District Collector
திருப்பூர்: நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த நிவாரணத் தொகை கிடைக்கவில்லை என சிஐடியு தொழிற்சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் திருப்பூரில் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு இதுவரை நிவாரண தொகை எதுவும் வழங்கப்படவில்லை என குற்றஞ்சாட்டி சிஐடியு தொழிற்சங்கம் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்தியது.
மனு கொடுக்க வந்தவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் காவல் துறை அனுமதிக்காததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சிஐடியு தொழிற்சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் சென்று மனு அளித்தனர்.